< Back
மாநில செய்திகள்
மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல -  ஜி.கே.வாசன்
மாநில செய்திகள்

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல - ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
7 Feb 2023 2:40 PM IST

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளது போதுமானது அல்ல. குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் சேதமான நெற்பயிர்களுக்கும், உளுந்துக்கும் அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகளின் முதலீட்டையும், செலவையும் ஈடுகட்டும் விதமாக அமையவில்லை. அதாவது விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நடவு நட்டு, உரம் போட்டு, பாதுகாத்து பயிர் செய்தார்கள்.

இந்தநிலையில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் தருவாயில் மழையினால் சேதமுற்றது. கடந்த 4 மாத காலமாக நெற்பயிர் விளைச்சலுக்கு நடவு முதல் அறுவடை வரை உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் உழைப்பும் வீணாகிவிட்டது. செலவு, உழைப்பு இவற்றை கவனத்தில் கொண்டால் நெற்பயிர்களின் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கினால் தான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரளவுக்கு நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்