< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே நோக்கம் - எம்.பி கார்த்தி சிதம்பரம்
|11 Jun 2022 11:30 PM IST
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்களது நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
மதுரை,
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்களது நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. முதலில் நாங்கள் தாண்ட வேண்டிய கிணறு ஜனாதிபதி தேர்தல். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தி பாஜக நிறுத்தும் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும்.
குறைந்தது போட்டியில் நெருக்கமான முடிவு வந்தால் கூட அதுவே எங்களுக்கு வெற்றியாகத் தான் நான் கருதுகிறேன் என்று கூறினார்.