< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"குழப்பமான மனநிலையில் உள்ள அதிமுகவினர்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்
|27 Jan 2023 4:19 PM IST
அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பர் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக நமது கட்சியின் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழக முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி களமிறங்கி வெற்றிபெறும்.
அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை. அவர்கள் குழப்பமான மன நிலையில் உள்ளனர். அவர்கள் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், திமுகவின் கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.