< Back
மாநில செய்திகள்
தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

தினத்தந்தி
|
3 Sept 2023 12:15 AM IST

14 வயது மாணவியை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

குளச்சல்,

ஈத்தாமொழி சுண்டப்பற்றிவிளையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது35), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் மணவாளக்குறிச்சி பகுதியில் பெற்றோருடன் தங்கியிருந்த 14 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்றார். இந்த மாணவியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஆகும்.

இதுகுறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடியில் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். இதற்கிடையே செல்வகுமார் தலைமறைவானார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று தூத்துக்குடியில் வைத்து அவரை கைது செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்