< Back
மாநில செய்திகள்
தேவநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர பெருவிழா தொடங்கியது
கடலூர்
மாநில செய்திகள்

தேவநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர பெருவிழா தொடங்கியது

தினத்தந்தி
|
24 July 2022 7:31 PM GMT

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர பெருவிழா தொடங்கியது.

நெல்லிக்குப்பம்,

ஆண்டாளுக்கு திருமஞ்சனம்

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி ஆண்டாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால், பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மாலையில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் மாடவீதியில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆடிப்பூரம்

இதை தொடர்ந்து தினந்தோறும் ஆண்டாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. இதற்கிடையில் ஆடி அமாவாசை அன்று தேவநாதசுவாமிக்கு பூ வங்கி சேவையும், வரலட்சுமி நோன்பு அன்று செங்கமலத் தாயாருக்கு பூ வங்கி சேவையும் விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆடிப்பூரமான 1-ந்தேதி காலையில் பெருமாள், ஆண்டாள் மற்றும் தேசிகருக்கு விசேஷ சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலையில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் சிறிய அளவிலான தேரில் எழுந்தருளி தேர் வீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்