< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குன்னூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த 62-வது பழக் கண்காட்சி
|29 May 2022 4:41 AM IST
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 62-வது பழக் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த கண்காட்சியில் 3 டன் அளவிலான 25 வகை பழங்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை சார்பில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தாஜ்மகால், கோவில் தேர் போன்ற பல்வேறு வடிவமைப்புகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.