< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...!
மாநில செய்திகள்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...!

தினத்தந்தி
|
26 July 2023 4:45 AM GMT

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

தூத்துக்குடி,

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு மறைமாவட்ட முதன்மை செயலாளர் செல்வம் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி தொடங்கியது.

இந்நிலையில், உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கதேர் பவனி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்