< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அஞ்சல்துறை சார்பில் 34-வது அகில இந்திய கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்
|22 Aug 2022 3:00 AM IST
சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு உள்பட 10 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன.
சென்னை,
சென்னையில் அஞ்சல்துறை சார்பில் 34-வது அகில இந்திய கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கோவிந்தராஜன், சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 22-ந்தேதி(இன்று) முதல் 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு உள்பட 10 மாநில அணிகள் பங்கேற்க உள்ளதாக கூறினார்.
போட்டி துவக்க விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா சதன், சர்வதேச கால்பந்து போட்டியில் கோல் கீப்பராக விளையாடி சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் அரசு அதிகாரிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.