< Back
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டுக்கு 19ந்தேதி விடுமுறை
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு 19ந்தேதி விடுமுறை

தினத்தந்தி
|
13 April 2024 9:51 AM IST

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக 19-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 19-ம் தேதி சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்