< Back
மாநில செய்திகள்
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில்தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர்
மாநில செய்திகள்

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில்தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கருத்தரங்கு

தினத்தந்தி
|
20 Sept 2023 11:20 PM IST

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பி.சங்கீதா முன்னிலை வகித்தார். உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் ஷிபிலா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி, குழந்தைகள் நலம் சார்ந்த திட்ட அலுவலர் செல்வராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா, தத்தனூர் பொட்டக்கொல்லை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஹரிசுதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து எடுத்துரைத்தனர். மேலும் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எந்தெந்த உணவுகள் மூலம் பெறுவது, இரும்புச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் இரத்த சோகை நோய், அயோடின் குறைபாடுகளால் ஏற்படும் நோயில் இருந்து நம்மை நாம் எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பன குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கண்காட்சி நடத்தப்பட்டதுடன், ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினர். முடிவில் உதவிப்பேராசிரியர் விஜயகுமார் நன்றியுரையாற்றினார்.

மேலும் செய்திகள்