< Back
மாநில செய்திகள்
சென்னை போலீஸ் கமிஷனராக  மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்த அரசுக்கு  நன்றி - ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர்
மாநில செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்த அரசுக்கு நன்றி - ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர்

தினத்தந்தி
|
2 July 2023 2:34 PM IST

சென்னை போலீஸ் கமிஷனராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்ததற்கு, அரசுக்கு நன்றி என ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த சங்கர் ஜிவால் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். போலீஸ் பயிற்சி அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் சென்னையின் 109-வது போலீஸ் கமிஷனராக அறிவிக்கப்பட்டார். சந்தீப் ராய் ரத்தோர் முறைப்படி சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்ததற்கு, அரசுக்கு நன்றி என ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

போலீஸ் கமிஷனராக சென்னை மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக அரசுக்கும் , முதல் அமைச்சருக்கும் நன்றி. மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் முதல் முன்னுரிமையாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்