< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சுதந்திரத்திற்குப் பின் இந்தியா ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமருக்கு நன்றி - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
|5 Jun 2022 8:57 PM IST
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி காஞ்சி கோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இது குறித்து ஆளுநர் மாளிகையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஆளுநர் ரவி காஞ்சி கோஷ் கண்காட்சி தொடக்க விழாவில் பாரதத்தின் சனாதன கலாச்சார ஆன்மிகத்திற்கு சேவை செய்வதில் காஞ்சி பீடத்தின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்தார்.
பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பிறந்தது என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி கூறினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.