< Back
மாநில செய்திகள்
காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - முதல் அமைச்சர் டுவீட்
மாநில செய்திகள்

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள 'தினத்தந்தி' உள்ளிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - முதல் அமைச்சர் டுவீட்

தினத்தந்தி
|
27 Sept 2022 2:35 PM IST

காலை உணவுத்திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், "காலை உணவுத்திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களுக்கு எனது நன்றி" என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "காலை உணவுத்திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன்; எவ்விதக் குறைபாடுமின்றி, சரியாக நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறேன்.

காலை உணவுத்திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருகிறது!. பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது!" இவ்வாறு முதல் அமைச்சர் தன்னுடைய டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்