திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி - அண்ணாமலை
|திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் பொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
இதையடுத்து திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நமது திருக்குறளின் புதிய மொழிபெயர்ப்பை, பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் இன்று வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட அன்பிற்காகவும், திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.