< Back
மாநில செய்திகள்
தஞ்சை- குடிநீர் குழாயில் திடீர் கசிவு: 20 அடி பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
மாநில செய்திகள்

தஞ்சை- குடிநீர் குழாயில் திடீர் கசிவு: 20 அடி பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
4 Aug 2023 12:40 AM IST

பல்லியகிராஹாரம் - தென்பெரம்பூர் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பல்லியகிராஹாரம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கம்பட்டு 6 மாதங்களுக்குள் குழாயில் கசிவு ஏற்பட்ட நிலையில், பல்லியகிராஹாரம் - தென்பெரம்பூர் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

வெண்ணாற்று கரையில் அமைக்கப்படிருந்த குழாயில் இருந்து திடீரென தண்ணீர் கசியத் துவங்கிய நிலையில், தொடர் நீர் கசிவால் மண் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடிக்கு பள்ளம் விழுந்தது. இதனால் பள்ளிய அக்ஹரஹராம் - தென் பெரம்பூர் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து இல்லாதவாறு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்