< Back
மாநில செய்திகள்
தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் ரத்து
மாநில செய்திகள்

தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் ரத்து

தினத்தந்தி
|
26 Jun 2024 7:53 AM IST

தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில்கள் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம்-மங்களூரு சந்திப்பு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06047) வருகிற 28-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு சந்திப்பு-தாம்பரம் சிறப்பு ரெயில் (06048) வருகிற 29-ந்தேதி மற்றும் ஜூலை மாதம் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்