< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரெயில்
|29 Sept 2023 11:36 PM IST
தாம்பரத்தில் இருந்து மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 6, 13, 20, 27-ந்தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06049) அடுத்தநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
இதேபோல, மறுமார்க்கமாக மங்களூருவில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 7, 14, 21, 28-ந்தேதிகளில் மதியம் 12 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06050) அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.