குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது: மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி
|குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். அத்துடன் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
""தமிழ் மொழிக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவரும் எனது தந்தை குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கௌரவித்திருப்பது, மகளாக எனக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.