< Back
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா

தினத்தந்தி
|
6 Feb 2023 12:45 AM IST

குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

அரியலூர் கள்ளங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்தும், பின்னர் பால் குடம் எடுத்து முருகனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளி காப்பு அணிந்து முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் அரியலூர் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்