< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோட்டில் ஜவுளிக்கடைகள், விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
|28 Feb 2024 8:51 PM IST
ஈரோடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேலான விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வருமானவரி சட்டம் 43பி(ஹெச்)-ஐ திரும்பப் பெற வேண்டும் அல்லது ஓராண்டு காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக 50 ஆயிரத்திற்கும் மேலான விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் சட்ட மாறுதல் சிறு, குறு தொழில்களை மட்டுமின்றி ஜவுளித்துறை சார்ந்த துறைகளை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜவுளி வணிகர்கள் போராட்டம், விசைத்தறி உற்பத்தி நிறுத்தத்தால் இன்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.