< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
கருவேலம்பட்டி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்
|21 Jun 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்டம் கருவேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் ஷகில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள், பேனாக்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் நுழைவுவாயிலை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் கணேசன், ஆசிரியர் பயிற்றுனர் மாதேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ராம் பிரசாத், உள்ளாட்சி பிரதிநிதிகள் செல்வம், முனியப்பன், நிர்வாகிகள் முருகன், மது மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மயில் நன்றி கூறினார்.