< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 Jun 2022 11:30 PM IST

வெண்ணம்பள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி:

பர்கூர் அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பி.சேகர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நேச பிரபா ஆகியோர் வரவேற்று இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சகாய ஆரோக்கியராஜ், ஆசிரியர்கள் அமலா ஆரோக்கியமேரி, சதீஷ், முனிராஜ், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்