< Back
மாநில செய்திகள்
பாடப்புத்தகம் வழங்கும் விழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பாடப்புத்தகம் வழங்கும் விழா

தினத்தந்தி
|
12 Oct 2022 11:53 PM IST

பாடப்புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். வயலப்பாடி ஊராட்சிமன்ற தலைவர், மேலாண்மைக்குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் 2-ம் பருவத்திற்குரிய விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்