குமரி-நாகர்கோவில் இடையே 130 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்கி சோதனை
|கன்னியாகுமரி-நாகர்கோவில் டவுன் இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் நிறைவடைந்தது.
முடிவடைந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்துநாகர்கோவில்,
மதுரை முதல் நாகர்கோவில் வரை இரட்டை ரெயில்பாதை பணிகள் நடைபெற்றது. இதில் மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி வரை ஒரு திட்டமாகவும், மணியாச்சி- திருநெல்வேலி- நாகர்கோவில் வரை மற்றொரு திட்டமாகவும் செயல்படுத்தப்பட்டு, பணிகள் நடந்தன.
மணியாச்சி-திருநெல்வேலி- நாகர்கோவில் இடையேயான பணியில் திருநெல்வேலி- ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடைபெற்றது. இதனைதொடர்ந்து ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடந்த 27-ந் தேதியன்று அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
இதையடுத்து கன்னியாகுமரி-நாகர்கோவில் டவுன் வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதில் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி, பாலங்கள், மின் இணைப்பு, சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நேற்று முன்தினம் முழுமையாக முடிவடைந்தன.
இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வழியாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வரை புதிய இரட்டைவழி பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் நேற்று காலை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது சோதனை ஓட்டத்தில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு அதிவிரைவு ரெயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் கன்னியாகுமரியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையத்தை 25 நிமிடங்களில் காலை 9.35 மணிக்கு வந்தடைந்தது.