நாகப்பட்டினம்
தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
|வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ஆண்டுக்கு இரண்டு முறை சாகர்கவாச் எனும் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சாகர்கவாச் எனும் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சோதனை
வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் மற்றும் போலீசார் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும், கடத்தல் நடைபெறுகிறதா? என்றும் படகுகளில் சோதனை செய்தனர்.
ரோந்து பணி
பின்னர் படகு மூலம் கடலில் வேதாரண்யம் முதல் நாகை வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடக்கும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், கடலோர காவல் குழும போலீசார், வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என 50-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.