வேலூர்
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பயங்கர தீவிபத்து
|குடியாத்தம்
குடியாத்தத்தை அடுத்த பரதராமி பஸ் நிலையம் அருகே சுப்பிரமணி என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். அதே கட்டிடத்தில் அவரது வீடும் உள்ளது. கடந்த ஒரு வருடமாக ஓட்டல் இயங்காததால் மூடப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தின் ஒரு அறை முழுவதும் ஓட்டலுக்கு தேவையான விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சுப்பிரமணி சித்தூரில் புதிதாக வீடு ஒன்று வாங்கி அதனை சீர் செய்து வருகிறார் அதற்காக அவரும் அவரது மனைவி வச்சலாவும் இன்று சித்தூர் சென்றிருந்தனர். அவரது மகன் ராஜேஷ்குமார், பரதராமியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இரவு சுமார் 7 மணியளவில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து திடீரென புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் வீடு எரிய தொடங்கியது.
இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வந்து பார்க்கும்போது அந்தக் கட்டிடம் பூட்டப்பட்டு உள்ளே 3 சிலிண்டர்கள் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த சுப்பிரமணியின் மகன் ராஜேஷ்குமாரும் அங்கு விரைந்து வந்தார்.
அங்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அதற்குள்வீட்டில் இருந்த 3 சிலிண்டர்கள் பத்திரமாக அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
===========