< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை: மினி திரையரங்கில் பயங்கர தீ - சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை: மினி திரையரங்கில் பயங்கர தீ - சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

தினத்தந்தி
|
5 July 2022 11:07 AM IST

சோளிங்கர் அருகே உள்ள திரையரங்கில் ஏற்பட்ட தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே சுமதி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது இத்த திரையரங்கில் இரண்டு திரையரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மினி திரையரங்கில் அதிகாலை திடீரென தீ விபத்தை ஏற்பட்டுள்ளது.

தீயானது திரையரங்கு முழுவதுமாக பரவியது. தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர்.

ஆனால் தீ மீண்டும் எரியத் துவங்கியதால் கூடுதலாக அரக்கோணத்தில் இருந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இரண்டு தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக திரையரங்கு தீ விபத்து உள்ளானது தெரியவந்துள்ளது.

திரையரங்கம் முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து சோளிங்கர் காவல் துறை வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்