< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து - போலீசார் விசாரணை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
11 Oct 2022 2:49 PM IST

கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி கிராமத்தில் முத்துப்பாண்டி (வயது 37), என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் தீயில் கடையில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து கடை உரிமையாளர் முத்துப்பாண்டி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஏதாவது மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்