< Back
மாநில செய்திகள்
நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

தினத்தந்தி
|
15 April 2023 12:30 AM IST

கொடைக்கானல் நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது.

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக சருகுகள், புதர்கள் கருகி வருகின்றன. இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் பிரகாசபுரம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

Related Tags :
மேலும் செய்திகள்