< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பூர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
|26 Feb 2023 7:57 PM IST
திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் அருகே வாவிபாளையம் என்ற பகுதியில் எலாஸ்டிக் பின்னலாடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பக்கிடங்கில் மதியம் தீ பரவியது.
இந்த தீயை அக்கம்பக்கத்தினர் அணைத்த நிலையில், சரியாக அணைக்காத காரணத்தினால் அருகில் இருந்த தொழிற்சாலைக்கும் தீ பரவியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள், விற்பனைக்கு தயாராக இருந்த பண்டல்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளது.