< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"சில்லி" காரணத்துக்காக பயங்கரம்..! கத்திக் குத்துக்கு காரணமான சில்லி சிக்கன் - வைரலாகும் பகீர் காட்சிகள்
|9 Jun 2023 3:50 PM IST
சேலத்தில் சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த ஊழியரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்,
சேலத்தில் சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த ஊழியரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல்பட்டியில் உள்ள சிக்கன் கடைக்கு வந்த முரளிதரன் போதையில் சில்லி சிக்கனை இலவசமாக தருமாறு ரகளை செய்துள்ளார். கடை ஊழியர் சதீஷ்குமார் மறுப்பு தெரிவிக்கவே, உடனே முரளிதரன் சதீஷை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கினார்.
10 இடங்களில் சதீஷின் உடலில் முரளிதரன் கொடூரமாக கத்தியால் குத்திய நிலையில், படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தலைமறைவாக உள்ள முரளிதரனைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.