< Back
மாநில செய்திகள்
சென்னையில் கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து..!
மாநில செய்திகள்

சென்னையில் கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து..!

தினத்தந்தி
|
2 July 2022 3:22 PM IST

பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரத்தில் கண்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை துறைமுகத்தில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

பூந்தமல்லி அருகே உள்ள பாப்பாச்சத்திரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு கண்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பின்னால் இருந்து மோதிய கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொருங்கியது. இதில் கண்டெய்னரை ஓட்டி வந்த டிரைவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த விபத்து காரணமாக பூந்தமல்லி நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்