< Back
மாநில செய்திகள்
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

தினத்தந்தி
|
29 July 2023 6:45 PM GMT

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் குத்துக்கல்வலசையில் நடந்தது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் தென்காசியை அடுத்துள்ள குத்துக்கல்வலசையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, கீழப்பாவூர் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், ஆலங்குளம் தலைவர் நீதிராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் சத்தியராஜ் வரவேற்றார். மாநில தலைவர் எஸ்.எம்.முனியாண்டி பஞ்சாயத்து ராஜ் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் டெண்டர் மற்றும் அனைத்து பணிகளையும் ஊராட்சி மன்றத்தில் வைத்து செயல்படுத்த வேண்டும். பஞ்சாயத்து தலைவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பூதியம் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பஞ்சாயத்து எல்கைக்கு உட்பட்ட அனைத்து அரசு விழாக்களும் பஞ்சாயத்து தலைவர்களின் தலைமையில் நடைபெற உத்தரவிட வேண்டும். பஞ்சாயத்துகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும். தூய்மை காவலர்களை நியமிக்க வேண்டும். பஞ்சாயத்தில் உள்ள காலிப்பணியிடங்களை பஞ்சாயத்து மன்ற தலைவர்களின் பரிந்துரையில் நியமிக்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் ஒன்றிய கூட்டமைப்பு துணைத்தலைவர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்