< Back
மாநில செய்திகள்
தென்காசி: கனமழையில் மரத்தடியில் ஒதுங்கிய சிறுவன் - மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்
மாநில செய்திகள்

தென்காசி: கனமழையில் மரத்தடியில் ஒதுங்கிய சிறுவன் - மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்

தினத்தந்தி
|
11 May 2024 7:05 AM IST

தென்காசி அருகே மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சிவசக்தி (14 வயது). இந்நிலையில் நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்