< Back
மாநில செய்திகள்
தென்கரை பேரூராட்சி கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

தென்கரை பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
2 Oct 2023 2:15 AM IST

பெரியகுளத்தை அடுத்த தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

பெரியகுளத்தை அடுத்த தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராதா ராஜேஷ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்குமார் வரவேற்றார். இதில், கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், தங்களது வார்டுகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். மேலும் கூட்டத்தின்போது, தென்கரையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக செயல்படும் மனமகிழ் மன்றத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பகுதியில் புறக்காவல் நிலையம் செயல்படுவதற்காக கட்டிடம் கட்ட வேண்டும். தென்கரையில், வைகை அணை சாலையில் பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியகுளம் நகராட்சி வணிக வளாகத்தை பேரூராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்