< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்ரூ.10.84 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
|14 July 2023 12:30 AM IST
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 18 ஆயிரத்து 958 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.74.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.56.69- க்கும், சராசரியாக ரூ.72.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 941-க்கு ஏலம் போனது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 16 ஆயிரத்து 859 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.75.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.69-க்கும், சராசரியாக ரூ.72.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 84 ஆயிரத்து 940-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.