< Back
மாநில செய்திகள்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில்பூஜை பொருட்கள் விற்கும் கடைகளுக்கான பொது ஏலம்ரூ.63.49 லட்சத்துக்கு விடப்பட்டது
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில்பூஜை பொருட்கள் விற்கும் கடைகளுக்கான பொது ஏலம்ரூ.63.49 லட்சத்துக்கு விடப்பட்டது

தினத்தந்தி
|
8 July 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில் வளாக பகுதியில் 10 கடைகளில் பூஜை பொருட்கள் வைத்து விற்பனை செய்ய உரிமம் மற்றும் தேங்காய் தீபம், பூசணி தீபம், தட்டுகள் சேகரித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட உரிமத்திற்கான பொது ஏலம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உதவி ஆணையாளர்கள் ராஜா, உதயகுமார் மற்றும் போலீசார் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியே ஏலம் கோரினர்.

இதையடுத்து 10 கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிம ஏலம் ஓராண்டுக்கு ரூ.63 லட்சத்து 49 ஆயிரத்திற்கு விடப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் தேங்காய் தீபம், பூசணி தீப தட்டுகள் சேகரித்து சுத்தம் செய்தல் உரிமம் ரூ.2 லட்சத்து 500-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்