< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பலி

தினத்தந்தி
|
30 March 2023 12:01 AM IST

பொன்னமராவதி அருகே மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பலியானார்.

தற்காலிக ஊழியர்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் அருகே தச்சம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி (வயது 44). இவர் பொன்னமராவதி மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். கொன்னைப்பட்டி ஊராட்சி மூலங்குடியில் மின்கம்பி அறுந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மலையாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மலையாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மலையாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்