< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்  கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
3 July 2022 10:22 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக ஆசிரியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ச்சி

1.06.2022 அன்றைய நிலவரப்படி காலிபணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி வரையில் மாலை 5 மணி வரை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்