< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகே டெம்போ தீ வைத்து எரிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகே டெம்போ தீ வைத்து எரிப்பு

தினத்தந்தி
|
3 April 2023 2:08 AM IST

தக்கலை அருகே டெம்போ தீ வைத்து எரிக்கப்பட்டது.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு ஆலுவிளையை சேர்ந்தவர் ஜாண்பிரைட் (வயது 31), டெம்போ டிரைவர். இவர் விபின் என்பவருக்கு சொந்தமான டெம்போவை ஓட்டி வருகிறார். ஜாண் பிரைட் தினமும் இரவு பணி முடிந்து டெம்போவை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தனது வீட்டின் முன்புறம் டெம்போவை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது டெம்போவின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி ஜாண் பிரைட் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவிற்கு தீவைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்