< Back
மாநில செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி

தினத்தந்தி
|
29 Aug 2023 9:17 PM IST

டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார்.

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகப்பபுரம் அருகே உள்ள பொட்டல்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது50), மாங்காய் வியாபாரி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகன் வியாபாரத்தை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி-திருநெல்வேலி 4 வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு விலக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த டெம்போ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து அவரது மகன் அஜய் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

----

மேலும் செய்திகள்