கன்னியாகுமரி
தக்கலை அருகே டெம்போ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
|தக்கலை அருகே டெம்போ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து ெகாண்டார்.
தக்கலை:
குலசேகரம் அருகே உள்ள செக்குமூடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), டெம்போ டிரைவர். இவருக்கு மஞ்சுஷாராணி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 4 மாதங்களாக பள்ளியாடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அடகு வைத்துள்ள நகைகளை மீட்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் வீட்டின் அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் மனைவி அறையில் சென்று பார்த்த போது மணிகண்டன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--