< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
|13 Oct 2022 2:05 AM IST
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல்
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மலையடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டெம்போவை மடக்கினர். உடனே, டிரைவர் டெம்போவை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து டெம்போவை பறிமுதல் செய்து அந்த பகுதியில் செம்மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ மற்றும் பொக்லைன் எந்திர டிரைவர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.