< Back
மாநில செய்திகள்
மகாளய அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி
மாநில செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
14 Oct 2023 7:00 PM GMT

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹரநாத சாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வீர ஆஞ்சநேய சாமி

தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்