< Back
மாநில செய்திகள்
உடுமலை அருகே ரூ.5 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை
மாநில செய்திகள்

உடுமலை அருகே ரூ.5 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
23 Jun 2022 11:53 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டியகவுண்டனூர் பகுதியில் ஜம்பலப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 32.87 ஏக்கர் புஞ்சை நிலத்தை 10 பேர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்திருந்தனர்.

இது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி கோவில் நிலத்தை மீட்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து போலீசாருடன் சென்ற இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.

மேலும் செய்திகள்