< Back
மாநில செய்திகள்
கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
30 Jun 2023 12:20 AM IST

முதுகுளத்தூர் கோர்ட்டு அருகே சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் கோர்ட்டு அருகே உள்ள சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் விமான கோபுரங்களுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், கோ பூஜை, நான்கு கால பூஜை, வேத மந்திரங்கள் இசை வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு சென்று மூலஸ்தான விமானம் கோபுர கலங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்