திண்டுக்கல்
ஆயக்குடி குறிஞ்சி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
|ஆயக்குடியில் உள்ள குறிஞ்சி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனியை அடுத்த மேற்கு ஆயக்குடியில் குறிஞ்சி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 23-ந்தேதி பூர்ணாகுதியுடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜை, நவசக்தி பூஜை, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குறிஞ்சி விநாயகர் கோவிலில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் நவகோள் தெய்வங்களின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை சுந்தரேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.