< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கொடைரோடு சக்திவேல் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
|4 Jun 2023 2:00 AM IST
கொடைரோடு சக்திவேல் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.
கொடைரோட்டில் உள்ள பழமை வாய்ந்த சக்திவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மின் அலங்கார சப்பரத்தில் முருகன் எழுந்தருளி, கொடைரோடு பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். இதில், கொடைரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.