< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தினத்தந்தி
|
7 March 2023 2:00 AM IST

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித் திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், மஞ்சள் நீராட்டு உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று காலையில் கொடி இறக்கம் நடந்தது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 10 மணி அளவில் பால், பன்னீர், திருமஞ்சனம் உள்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் ஆனந்த சயன கோல லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்