தேனி
தேனி பொம்மையகவுண்டன்பட்டி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
|தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம்
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் 24மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த விழாவுக்கு உறவின்முறை கவுரவ தலைவர் கனகராஜ், நாட்டாண்மை கோவிந்தராஜ், தலைவர் வீரச்சாமி, செயலாளர் முருகன், பொருளாளர் பொன்அழகு, உதவித்தலைவர் ராமு, உதவி செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கலந்துகொண்டவர்கள்
கும்பாபிஷேகத்தில் 24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தென்மண்டல தலைவர் ஆர்.எஸ்.ராஜசேகரன், கவுரவ தலைவர் ஜெயராமன், மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல், தேனி நகர தலைவர் கந்தபாண்டி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் கோபி, தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ஆனந்த், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜ்குமார், காமாட்சியம்மாள், தேனி வக்கீல் சங்க செயலாளர் செல்வக்குமார், பொறியாளர்கள் முருகேசன், பாண்டியன், வினோத்குமார், கவுதம்ராஜ், வர்த்தகர்கள் நாகரத்தினம், தர்மராஜ், அழகர்சாமி, ரவிக்குமார், மயில்வேல், ராஜேஷ், அன்பு, சுப்பிரமணி, முத்தையா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை 24மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை, சமுதாய நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.